Tuesday, January 19, 2016

அபிமானிகளே,                                                                             
        (பொருள் : கொங்கு சீர்கள் மற்றும் சமுதாயத்தில் தமிழ் அந்தணர் (பிராமணர்கள்) பங்கு குறித்து)

சேர அரசர்கள் தம் முத்திரையான பெருந்தாலியை நமது கொங்கு  பதினெட்டு ஜாதிகளுக்கும் திருமண அடையாளமாக (பதிவு சான்று) வழங்கினர் என்று மதுக்கரை குலாலர் (வேட்கோவர்) பட்டயம் கூறுகிறது .

அருமைக்காரர்கள் சீர் முறைகளை நடத்தும் அதிகாரிகளாக ஆதி காஞ்சிபுரம் முதற்கொண்டு இருந்து வருகின்றோம்.

நமது சீர்முறைகளை காலத்தால் மாறாத வண்ணம் கவியாக வழங்கியுள்ளார் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அண்ணமார் சாமி கதை என்றொரு சரித்திர காவியம் பிச்சை பட்டன் எனும் புலவரால் பாடப்பட்டுள்ளது. பிச்சை பட்டன் கதை பதினெட்டாம் நூற்றாண்டு கோநாட்டது என்றால் வேலூர் வாரணவாசி புலவர் எழுதியுள்ள அண்ணமார் காவியம் பதினேழாம் நூற்றாண்டு அரைய நாட்டினதுஇம்மூன்று   இலக்கியங்களிலும் கொங்கு வேளாளர் தம் சீர்களையும் அவற்றில் பங்கேற்போரையும் குறிப்பிட்டுள்ளனர்.

நால் வகை அந்தணர்கள்நாவிதன்வண்ணார்பண்டாரம்குயவர்பள்ளர்பறையர்மாதாரிஆசாரிகம்பர்தம் வாரிசுகளான புலவர்கள்மேளத்தார் ஆகியோர் உட்பட ஊரின் அனைத்து ஜாதியினரும் பங்கேற்று சீர் செய்வதாக இவ்விரண்டு காவியங்களும் பதிவு செய்கின்றன.

இவர்களுள் அந்தணர்கள் பங்கு பற்றியதே இவ்வறிவிப்பு. அந்தணர்கள் சங்க இலக்கியங்களிலேயே புலவர்களாகவும்ஞானிமுனிவர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அகத்தியரும்திரணதூமாக்கினி (தொல்காப்பியர்) ஆகிய தமிழ் இலக்கண ஆசிரியர்களே மறையோதும் அந்தணர்கள் என்பது அறிந்ததே.

சிலர், ரிஷி முனிவர்களது மக்களான அந்தணர்கள், கொங்கு குடிகள் அல்ல என்பதுபோல் தவறான கருத்தினை பரப்பி வருகின்றனர். மதுரையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் உள்ள பாதிரிகள் "அருமை" என்ற ஒரு பொய்யான புத்தகத்தை எழுதிஅதன் மூலம் இவ்விஷ விதை விதைக்கப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் அருமை பெரியவர்கள் சிலரை நயவஞ்சகமாக அழைத்துகிறிஸ்தவராக ஞானஸ்நானம் (Baptismசெய்துள்ளதான தகவல் அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாகும். மேலும் அந்தணர்களை ஒழிக்கவும்வேத ஆகம முறைகளை அழிக்க வேண்டும் எனவும்அவர்களுக்கும்வேதத்திற்கும் கொங்கு திருமணங்களில் இடமில்லை என்பதுபோல் “சைவதிருமணம்”, "தமிழ்முறை" என்று போலியாக ஒரு கற்பனை கூத்தையும்அதனை அருமை சீர்களுள் கலந்தும் செய்யவும் சிலரை  தயார் செய்துள்ளனர் (கொங்கு சமய இறையியல் கல்வி இயக்கம்! - மெய்யப்பன் போன்றோர்)மேலும் நாம் இந்துக்களல்ல என்றும்கொங்கு சமயம் என்று புதிதாக ஒன்றினை கிறிஸ்தவர்கள் தூண்டி உருவாக்கியுள்ளனர்நமது கொங்கு நாட்டின் குலகுருக்கள் மதமானது சிருங்கேரி சங்கர மதமான ஸ்மார்த்த சைவ  மதம்தான்இவை, கொங்கு செந்தமிழ் வேளிர் வமிசாவளியினரான கொங்கு மக்களுக்கு சம்மந்தமோமுகாந்திரமோ இல்லாத விஷயங்கள். இவை திட்டமிட்ட கலாச்சார சிதைப்பு வேலையாகும்.


கொங்குநாட்டின் ஒவ்வொரு பூர்வ குடிக்கும் அந்தணர்கள் குலகுருக்களாக உள்ளனர். இவர்கள். நாட்டு குருத்துவம்கோயில் பூஜை ஸ்தானிக குருத்துவம் ஆகியவற்றை ஆதி முதல் மிராசி உரிமையாகக் கொண்டவர்கள் என்று செப்பேடு பட்டயங்கள் குறிப்பிடுகின்றனர். காணியாட்சி குருத்துவம் செய்யும் ஆதி சைவரே அக்காணியாளர்களின் குல புரோகிதராகவும் உள்ளார். நமது கொங்கர் போதாயன சூத்திரத்தின் படி ஸம்ஸ்காரங்களான ஜாத கரணம் (ஜாதகம் கணித்தல்), நாம கரணம் (பெயர் வைத்தல்), அன்னபிராசனம் (சோறு ஊட்டுதல்), சௌளம் (மொட்டையடித்தல்), உபநயனம் (பூணூல் - அல்லது மாப்பிள்ளைக்கு குறுக்குத் துண்டு கட்டுதல்), பாணிக்கிரகணம் (கல்யாணம்), அந்திம சம்ஸ்காரம் (இறுதி சடங்குகள் - திதி) ஆகியவை செய்தும், பிற யாகங்கள் , புண்யார்ச்சனைகள் செய்ப்பவர் நமது காணியாட்சி உரிமைக்கு காணி பஞ்சாங்கர்,குருக்களே.இவர்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.


825-894இல் சேரமான் பெருமாள் நாயனார் கயிலை செல்லும் முன்னர்,கொங்கதேசத்தை சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அளித்தார்.அவரோ,அதனை அங்கிருந்த குலகுருக்களுக்கு அளித்தார்.அதுவே இன்றைய சஞ்சார காணிக்கை, மாங்கல்ய வரி.


இதனை குருகுல காவியம் என்ற பண்டைய கொங்கதேச இலக்கியம் கூறுகிறது.

போதாயன சூத்திரப்படி, பிராமணர், ராஜன்யர் (வெள்ளாளர்), வைசியர் (செட்டியார் மற்றும் கலைஞர்கள்) ஆகியோருக்கு உபநயனம் (பூணூல்) அணிவது கட்டாயம். கம்யூனிச - ட்ரேவிடியனிஸ குழப்பங்கள் காரணமாக 100 வருடங்களுக்கு முன் பூணூல் அணிந்து வந்த வெள்ளாளர்கள் (ஈரோடு பகுதி பெரியவர்களிடம் விசாரித்தால் சொல்கின்றனர்) , தற்பொழுது:
1. பூந்துறை நாட்டார் கல்யாணங்களில் பூணூலாகவும் (காசி யாத்திரை),
2. பிறர் கல்யாணங்களில் குறுக்குத் துண்டாகவும் 
3. திதி காரியங்களில் 
மட்டும் அணிகின்றனர். பூந்துறை நாட்டில் இன்றும் ஓரிருவர் அணிந்துள்ளனர்.

இவர்களுக்குப் பின் சோழர் கொங்கினை கைப்பற்றி அலகு குருக்களையும்குடிமக்களையும் குடியேற்றினர். இவர்களைக் குடியேற்றியவர்கள் குறிப்பாக குலசேகர (ராஜராஜன்) சோழன்குலோத்துங்க சோழன் ஆகியோர். இக்குடியேற்றமே சோழன் பூர்வ பட்டயத்தில் குறிக்கப்படுகிறது. இன்றும் இவ்விரு பிராமணர்களுக்குள் கொள்வினை கொடுப்பினை இல்லை. பல சம்பிரதாய பேதங்கள் உண்டு. இவர்கள் சற்றே வேறுபட்ட சோழ நாட்டின் தமிழை பேசுகின்றனர்.  இவற்றை கொங்கு மண்டல சதகம் "ஆதி சைவர்" என்ற தலைப்பில் காணலாம். 
ஆலய பிரதிஷ்டை உரிமைகள் குலகுருக்களுக்கே உரிமையானவை.


ஆதிசைவர்கள்
55. 


குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த் தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தர் கண்டு நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே.
         விளக்கவுரை - குலசேகர சோழன்குலோத்துங்க சோழன் ஆகிய சக்கிரவர்த்திகள் கொங்கு நாட்டின் ஆதிக்கம் பெற்றுள்ள காலத்தில்அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆக மோக்தமாக நடத்தக் கருதித் தன்னாட்டுள்ள வல்லவர்களை அழைத்து காணி பூமியும்  பெருமையும் கொடுக்கப் பெற்றவர்களான ஆதிசைவர்கள் விளங்குவது  கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : கோ ராஜகேசரி வர்மனான (முதல்) ராஜராஜ தேவர் என்பவன் தஞ்சாவூரை ராஜதானியாகக் கொண்டு மிகுந்த பராக்கிரமத்துடனும் நீதியுடனும் ஆட்சி புரிந்தான்பராதீனப் பட்டுக் கிடந்த சோழராச்சியத்தை உயர் நிலைக்குக் கொண்டு வந்தவனிவனே. கங்கபாடிநுளம்பபாடிவேங்கிநாடுகுடகுஈழம் முதலிய ராச்சியங்களை வென்றனன். மூவேந்தர் தமிழ்நாட்டுக்கும் அதிபன் என்பது தோன்ற மும்முடிச் சோழன் என்னும் பெயருண்டாயிற்று. ஆலயங்களிலெல்லாஞ் சிறந்ததாக இருத்தல் வேண்டுமென கருதிகண்டோர் அதிசயக்கத்தக்க
'
பிரஹதீசுரர்என்னும் ராஜ ராஜ ராஜேச்சுர ஆலயங் கட்டுவித்தான். இவன் சைவ சமயத்தி லீடுபட்டவனாயினும் பௌத்த விஹாரங்களுக்கும்ஜைனப் பள்ளிகளுக்கும் விஷ்ணுக்ரஹங்களுக்கும் பல தருமங்கள் செய்திருக்கிறான் தன் நாட்டிலுள்ள ஆலயங்களிலெல்லாம் ஆகமோக்தமாக பூஜை முதலியன  நடக்குமாறு வடநாட்டிலிருந்து பல பிராமணர்களை வரவழைத்துக் குடியேற்றினான். கல்விமான்களிடத்திற் பற்றுடையவன். இவன் காலத்திற்றான்  நம்பியாண்டார் நம்பிகளும் கண்டராதித்த தேவர் முதலிய திருவிசைப்பா வுடையாரும் பிறருமிருந்தார்கள். திருமறை கண்ட சோழனுமிவனே. கி.பி. 985 முதல் 1012 வரை ஆட்சி புரிந்தானென்று சாசன பரிசோதகர்கள்  தீர்மானிக்கிறார்கள். கொங்கு இவன் ஆட்சிக்குட்பட்டிருந்த தென்பதை இவன் ராச்சியவருஷம் வாழவந்தி நாட்டைச் சேர்ந்ததூசியூரில் ஒரு மழவராயனால் திருக்கற்றளியுடைய பரமேசுரர் கோவிலுக்கு ஏற்படுத்திய வரிஈழத்துப் போரில் மாண்ட தன் தந்தையின் தாகசிரம பரிகாரத்துக்காக வெட்டிய கிணறு முதலியவற்றை குறிக்குஞ்சாசனங்களாலும் ஒற்றியூரன் பிரதி கண்டவன்மன் அமன்குடி அல்லது கணபதி நல்லூரில் கொடுத்த நிலம்குளத்தின் சாசனங்களாலும் (S.S.I. VOI. III) நன்கு காணலாம். அந்நாளில் தான்கொங்கு நாட்டிற் பாடல்பெற்ற தலங்களில் ஆகமோக்தமாகப் பூஜை முதலியன நடைபெறும் பொருட்டுத் தன்னாட்டிற்றேர்ந்த பிராமண பண்டிதர்களை அழைத்து வைத்து அவர்களுக்கு  வேண்டிய காணி பூமியும் கௌரவங்களும் கொடுத்தனன். இந்த ராஜராஜ தேவர் தன்னாட்டிருந்து அழைத்துக் குடியேற்றியவருக்குத் தன் பெயரான  "குலசேகரப் பட்டன்" எனப் பெயர் கொடுத்தனன். இந்த ராஜ ராஜ தேவர்க்குக் குலசேகரன் என்னும் பெயர் உண்டு என்பதைத் திருமுறை கண்ட புராணம்.
                         (மேற்)
உலகுபுகழ் தருசைய மீது தோன்றி யோவாது வருபொன்னி
                          
சூழ்சோணாட்டிற் றிலகமென விளங்குமணி மாடவரூர்த் தியாகேசர் பதம்
                          
பணிந்து செங்கோலோச்சி யலகில்புகழ் பெறுராச ராசமன்ன னபயகுலசேகரன்பா
                           
லெய்து மன்ப ரிலகுமொரு மூவரருள் பதிகமொன்றொன் றேயினிதி னுரை
                            
செய்ய வன்பாற் கேட்டு
        
    "கொங்கு குலசேகரனாங் கோன்பால் வந்து குஞ்சரத் தோனருள் செய்த கொள்கை யெல்லாமண்டுபெருங் காதலினாற் சொல்லி" என்பனவற்றால் விளங்குகிறது. இதன்பின்,

     கோவிராஜகேசரி பன்மரான திரிபுவன சக்கிரவர்த்திகள் உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர் என்பவன் மிகுந்த பராக்கிரம முடையவனாக ஆட்சிக்கு வந்தனன். இவன் காலத்து வடக்கே கங்கை – தெற்கே ஈழம் - மேற்கே சமுத்திரம் - கிழக்கே கடாரம் (பர்மா) வரையிலும் செங்கோல் செலுத்தி வந்தான். சுங்கங்களைத் தவிர்த்தான். நில அளவு செய்து ஆறிலொரு கடமை ஏற்படுத்தினான். ஏரிகால்வாய் வெட்டினான். காடுகளை வெட்டிப் பட்டணமாக்கினான். பல சிவாலயம் விஷ்ணு வாலயங்கள் கட்டுவித்தான். பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான்.

இவன் மிகுந்த கல்வி மானாக இருந்ததன்றிக் கற்றோர்க்கு உதாரன். இவன் காலத்தில்தான் சேக்கிழார் பெரிய புராணம் பாடினார். விசிஷ்டாத்வைத மதஸ்தாபக ரான ஸ்ரீராமாநு ஜாசாரியரிருந்தார். இவ்வரசனால் தனக்குத் தீங்கு நேருமென நினைந்து தான் போஜள ராஜ்ஜியத்ற்கு போய் ஒளித்திருக்க நேர்ந்தது. இக்குலோத்துங்கன் சுத்த சைவனாயினும் வைஷ்ணவஜைனபௌத்தக் கோவில்கள் தோறும் இவன் சாசனங்களைக் காணலாம். கி.பி. 1070 முதல் 1118 - வரை ஆட்சி புரிந்திருக்கிறான் என்பர்.

சென்னியபயன் குலோத்துங்க சோழன் றில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறென்றும் புவிகாக்கும் மன்னர் பெருமா னனபாயன் வருந்தொன் மரபின் முடிசூட்டுந் தன்மை நிலவு பதியைந்தி னொன்றாய் விளங்குத் தகைத்தவ்வூர்

                                         (
பெரியபுராணம்)
     
இந்தக் குலோத்துங்க சோழவேந்தன் திருச்செங்கோட்டிற்  பூசித்துள்ள ஆலம்பாயன கோத்திரத்தானான குலசேகர பட்டனுக்குச் சகாயமாகப் (பெண் கொள்ளல் கொடுத்தலுக்குக்) காசிப கோத்திரத்து விற்பன்னரான ஒரு சிவாசாரியருக்குக் "குலோத்துங்க பட்டன்" எனத் தன்பெயரும் பிற ஆதிக்கமுந் தந்து வாழ்ந்திருக்கச் செய்தனன்.

காரணிக மான வளவன்கலி யுகாதியிற் கட்செவி
                            
மலைப்பரமனைக்
 
கந்தனை வணங்கிமக பூசையுண்டாக்கினன் கைலாச
                               
நாதசிவனைத் தாரணி புகழ்ந்திடத் தாபித்தனன் பெரிய தண்கூப
                               
மதுகண்டனன் சைவ மறையோர்பூச னைக்கினியராகவே தனதுமண்
                                
டலமேவியே சீரணி சீகாழியா லம்பாயர் காசிபர் திறத்தொடர்ச்சனை
                                   
செய்யவே
     
திறமுற வமைத்தனன் மநுநீதி முறைகண்ட செம்பியன்
                               
பெற்றபெருமை
(திருச்செங் கோட்டுத் திருப்பணி மாலை)

     இதனால் நன்கு விளங்கும். இது போலவே கொங்கு மண்டலத்துள்ள மற்ற தலங்களிலும் நிறுவினான். சோழன் குடியேற்றிய சிவத்விஜர்களுக்கும் முன்னம் இங்கிருந்தவர்களுக்கும் சில சாம்பிரதாய பேதங்களிருக்கின்றன. அவர்கள் கிராமாந்தரங்களில் பூஜகர்களாயும்நாட்டுக் குருத்வமுடையவர்களாயும் இருக்கிறார்கள். புதியவர்கள் பாடல் பெற்ற தலங்கள்மற்றும் பிரதான ஆலயங்களில் அர்ச்சகர்களாயும் ஆசாரியத்வமுடையர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.


இதன்பின் போசளவிஜயநகரமைசூர் காலங்களில் தெலுங்குகன்னட அந்தணர்களும்பிற குடிகளும் குடி வந்தனர்.

தமிழர் சிருங்கேரி சங்கர மதத்தையும்பின்னோரில் தெலுங்கர் இதே மதத்தினையும்கன்னடர்கள் மாத்வ மதத்தினையும் கடைபிடிக்கின்றனர். நமது கொங்கு நாட்டின் மதமானது சிருங்கேரி சங்கர மதமான ஸ்மார்த்த மதம்தான்கொங்கு நாட்டின் சோழர் காலம் வரை இருந்த அந்தணர் பிரிவுகள் நான்கு. அவை:

1.    வைதிகர்: இவர்களுள் பல ஜாதிகள் உண்டு. அக்கிரகாரத்தில் இருப்போர். இவர்களுள் நான்கு பேர் நம் மக்களுக்கு குலகுருக்களாக உள்ளனர். சோழியர் ஜாதியினரான இவர்களே கொங்கத்தின் ஆதி பிராமணர்.வைதிகம்,பரோகிதம்,ஸ்தானிக பூஜை மூன்றும் செய்பவர்கள். சோழியரில் தில்லை மூவாயிரர்,
வா திருவானைக்காஅ  1000 ரவர் வகையறாவினர். மேலும்  இவர்களுள் பிற குலத்தவர்கசாஸ்திரிகள் என்போர் ஆதிசைஇவ குருக்களுளும் க்கு வேத ஆசிரியர்களாகவும்புரோகிதர்களாகவும் உள்ளனர். மேலும் கொங்கு காணியாட்சி கோயில்களில் வேத பாராயணம் ஆகிய பணிகளை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் சிருங்கேரி சங்கராச்சாரியாரை ஆசிரியராக உள்ளனர். பெரும்பாலும் யஜுர் வேதத்தினை சார்ந்தவர்கள். பரிசாரகம், சுயம்பாகம் போன்ற பங்குகளையும் செய்கின்றனர். 

2.   பஞ்சாங்கர்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களாகிய "வேதாங்கம்" எனப்பவற்றுள் ஒன்றாகும்.  இதனைப் படித்துக் கற்று விவசாய பஞ்சாங்கம் (பயோ-டைனாமிக் விவசாயம்) மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை செய்து வருகின்றனர். இவர்களுக்கும் சிருங்கேரி மடத்தை சார்ந்தவர்களே.பெரும்பாலும் காணியாட்சி பஞ்சங்கரே புரோகிதராகவும் இருந்துள்ளார்.

3.   கிராமிய குருக்கள்:
        தொண்டை நாடு காளஹஸ்தியிலிருந்து சுந்தரர் காலத்தில் குடியேற்றப்பட்டவர்கள் (800 circa) நமது கொங்கர் போதாயன சூத்திரத்தின் படி ஸம்ஸ்காரங்களான ஜாத கரணம் (ஜாதகம் கணித்தல்), நாம கரணம் (பெயர் வைத்தல்), அன்னபிராசனம் (சோறு ஊட்டுதல்), சௌளம் (மொட்டையடித்தல்), உபநயனம் (பூணூல் - அல்லது மாப்பிள்ளைக்கு குறுக்குத் துண்டு கட்டுதல்), பாணிக்கிரகணம் (கல்யாணம்), அந்திம சம்ஸ்காரம் (இறுதி சடங்குகள் - திதி) ஆகியவை செய்தும், பிற யாகங்கள் , புண்யார்ச்சனைகள் செய்ப்பவர் நமது காணியாட்சி உரிமை குருக்களே. வடக்கு தலைவாசல் ஆறு நாடுகளான:
1. பூந்துறை நாடு,
2 .வடகரை நாடு
3. அரைய நாடு
4. பூவாணிய நாடு
5. காஞ்சிகோயில் நாடு
6. ராசிபுர நாடுகளிலும்,
கிழக்குத் தலைவாசல் ஆறு நாடுகளிலும்:
1. வெங்கல நாடு
2. மண நாடு
3. தலைய நாடு
4. கிழங்கு நாடு
5. தட்டைய நாடு
6. வாழவந்தி நாடு

ஆகிய ஆதி நாடுகளில் உள்ளனர். மொழிசீர்கள் போன்றவற்றால் கொங்கு மக்களுடன் ஒன்றுபட்டவர்கள். நாட்டு குருத்துவம்காணியாட்சிகளில்  ஸ்தானிக குருத்துவம் (பூஜை), பரிசாரகம், சேனபாகம் போன்ற பங்குகளை
உடையவர்கள். "கிராமிய குருக்கள்" என்று அழைக்கின்றனர். பூர்வ குடிகளுக்கு குலகுருக்களாக உள்ளனர். "கொங்குநாட்டு பிராமணர்கள்" என்று கெஜட்டில் உள்ளது.

4.   அலகு குருக்கள்:
    சோழர்களால் கொங்கில் குடியேற்றப்பட்டவர்கள் (600-1032 circa) நமது கொங்கர் போதாயன சூத்திரத்தின் படி ஸம்ஸ்காரங்களான ஜாத கரணம் (ஜாதகம் கணித்தல்), நாம கரணம் (பெயர் வைத்தல்), அன்னபிராசனம் (சோறு ஊட்டுதல்), சௌளம் (மொட்டையடித்தல்), உபநயனம் (பூணூல் - அல்லது மாப்பிள்ளைக்கு குறுக்குத் துண்டு கட்டுதல்), பாணிக்கிரகணம் (கல்யாணம்), அந்திம சம்ஸ்காரம் (இறுதி சடங்குகள் - திதி) ஆகியவை செய்தும், பிற யாகங்கள் , புண்யார்ச்சனைகள் செய்ப்பவர் நமது காணியாட்சி உரிமைக்கு குருக்களே.மேற்கு தலைவாசல் ஆறு நாடுகள்:
1. ஓடுவங்க நாடு
2. குறுப்பு நாடு
3. ஆறை நாடு
4. வாரக்கா நாடு
5. காவடிக்கா நாடு
6. ஆனைமலை நாடு
மற்றும் தெற்கு தலைவாசல் ஆறு நாடுகள்:
1. நரையனூர் - நல்லுருக்கா நாடு
2. தென்கரை நாடு
3. காங்கய நாடு
4. பொங்கலூர் நாடு
5. வைகாவூர் நாடு
6. அண்ட நாடு

ஆகியவற்றிலும்மேலும் பாடல் பெற்ற பெரும் கோயில்களில் அர்ச்சகர்களாகவும் உள்ளனர். சிலர் நாட்டு ஆச்சாரியத்துவம் உள்ளவர்கள்.

இவ்வனைவரும் கொங்கு பூர்விக குடிகளே. கொங்கு மக்களின் வாழ்க்கை முறைகளில் இன்றியமையாதவர்கள்.
இம்முறைகள் ஹைதர்-திப்புவால் அழிக்கப்பட்டுஇன்று கிருஸ்தவ மிஷனரிகளால் அழிக்கப்படுகிறது.வீரமாமுனிவர் முதல் தமிழ் எழுத்துமொழிபண்பாடு  ஆகியவற்றை திட்டமிட்டு  சிதைத்து வருகின்றனர்.இவர்கள் நோக்கம் பிராமணர்களைத் தனிமைப்படுத்தி ஊரைவிட்டு வெளியேற வைப்பது. பின்னர் நம்மை வெளியேற வைக்கின்றனர்.கிராமத்தில் இயற்கை விவசாய முறைகளை அழிப்பதே இதன் சூட்சுமம்.


உதாரணத்திற்கு: கொடுமுடி மகுடேச்வரர் கோயில் என்ற கொங்கேழ் ஸ்தலங்களுள் ஒன்றானபாடல் பெற்ற ஸ்தல ம்பள பட்டியலைப் பார்க்கையில், எவ்வாறு அனைத்து கோயில் அங்கங்களும் சர்க்காரால் அழிக்கப்பட்டு, அர்ச்சகர் மட்டும் உள்ளார், அதனையும் தற்பொழுது ஏன் தூக்க முயற்சிக்கின்றனர் என்ற சூட்சுமம் புரியும்:


வெள்ளையர் எட்கர் தர்ஸ்டன் "தென்னிந்திய ஜாதிகள்" (1909) என்ற புத்தகத்தில் கூடபிராமணர்கள் பற்றி "நாவிதர்" என்ற தலைப்பில் கூறுகின்றனர்.


மேலும் புக்கனான் தனது மதராஸ், மைசூர், கனரா பிரயாண அனுபவ புத்தகத்தில் கூறுகையில்:நாடுகாணியாள கவுண்டர்களும்பிற காணி உரிமை (மிராசி) பாத்தியதாரர்களும்காணியாட்சி குருக்களுக்கு ஊர்ப்பணம் 3 3/4 ரூபாயில், 1/4 பணம் காணியாட்சி குருக்களுக்குஓமம் வளர்த்து மங்கிலிய பூசை செய்வதற்காக மங்கிலிய வரியாகத்தருகின்றனர்.

குடி பெயர்ந்து வேறு ஊர்களில் வசிக்கும் மிராசி உரிமை இல்லாத "குடி வந்தவர்கள்" எனப்படுபவர்களுக்குகுருக்கள் உள்ளூரில் இல்லாததால்நாவிதரை வைத்து முடித்து விடுகின்றனர். குடி வந்தவர்கள், ஊர் பணத்தில் காணியாட்சி குருக்களின் புரோகிதத்துக்காக "மங்கிலிய வரி" என்று குலகுரு வரியுடன் சேர்த்து அளிக்கின்றனர்.

காட்டுவலவு எனப்படும் சாதிக்குள் கல்யாணம் இன்றி இம்மூன்று பிரிவுகளுக்குள் பிறப்பவர்களுக்கு குலகுரு தவிர பிற உரிமைகள் இல்லை 

மங்கல வாழ்த்துவைதீக தெய்வங்களுக்கு அகவலோடு துவங்கி"என் குருநாதன் இணையடி போற்றி" என குலகுருக்களைப் போற்றி முடிகிறது.

கொங்கு திருமணத்தில் பிராமணர் பங்குபெறும் சீர்கள் :

1.    குலகுருவிடம் ஆலோசனை:
வயது வந்ததும்குலகுருவினிடம் சென்று ஆலோசனை செய்துள்ளனர்:
ஆதாரம்: மங்கல வரி 33: "வேதியன் பக்கம் விரைவுடன் சென்று"

கிராமிய இயற்றமிழ் பாடல்களில் குலகுருக்கள் பற்றிய குறிப்புகள் (நன்றி: விக்னேஷ் அந்துவன், பெருந்துறை):

2.   சோதிடர்- பஞ்சாங்கரிடம் ஆலோசனை:
குலகுரு முன்னிலையில் பஞ்சாங்க ஜோதிடரை அழைத்து பொருத்தம் பார்த்தல்: கை ரேகைஜாதகம்கவுளிபெயர்சகுன குறிப்புதச்சன் சகுனம் ஆகியவற்றை வைத்து முடிவு செய்துள்ளனர். 

ஆதாரங்கள்:
1.     மங்கல வாழ்த்து வரி 34-:

சோதிடனை அழைத்துச் சாத்திரங் கேட்டு
இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி
இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி
இருவர் பேரையும் இராசியில் கேட்டுக்
கைத்தலம் ஓடிய இரேகைப் பொருத்தம்
ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத்
தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு
வாசல் கௌலி வலிதென நிமித்தம்           40
தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்
குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு
உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப்
பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து

2.     அண்ணமார் சாமி கதை: பக்கம் 338, வரிகள் 9--- முதல் 20:
3.     அண்ணமார் காவியம்பக்கம் 94----,95,  வரிகள் 18 முதல் -24, 1:
"ஆடி பதினாறான திங்கட் கிழமையிலே

தேடிய ரோகிணியில் செய்ய கன்னி லக்கினத்தில்
வல்ல பிராமணர்கள்  மறையோர்கள் தான் கூடி
நல்ல முகூர்த்தமதில் நல்வேளை தான் பார்த்து
வேழ முகமுடைய விநாயகனை உண்டு பண்ணி
நாள் முகுர்த்தந் தேங்காயும் நன்றாகவே உடைத்து
வல்லதொரு சஷ்த்திரிகள் மறையோர்கள் தான்கூடி

சொல்லியே பிராமணர்கள் சோபனங்கள் என்றுரைத்து "


3. பிருமச்சரியம் கழித்தல்:
5-9 வயது வரை சொந்த கிராமத்தில் திண்ணைப்பள்ளியில் தொடக்கக்கல்வி. பின்னர் 
9-14 வரை     பிரும்மச்சாரியாக குருவிடம் குருகுலத்தில் பயிலும் மாணவனுக்கு பூணூலான குருக்குத்துண்டு கட்டி அலங்காரம் செய்தல். பூந்துறை நாட்டார் பூணூலே போட்டு காசி யாத்திரை செய்து அலங்காரம் செய்கின்றனர்.

ஆதாரம்:  அண்ணமார் சாமி கதை: பக்கம் 343 வரிகள் 8 -முதல் 24, பக்கம் 344, வரிகள் 6 -முதல் 7:
:


4.     முகூர்த்த ஓமம் வளர்த்தல்: ஓம சாந்தி செய்து மங்கிலியத்தை காணியாட்சி குருக்கள் அருமை பெரியவரிடம் கொடுத்தல்.
ஆதாரங்கள்:
1. மங்கல வாழ்த்து: வரி 253: சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலே

2. அண்ணமார் சாமி கதை: பக்கம் 346 வரிகள் 1-17:

3.   அண்ணமார் காவியம்பக்கம் 97,  வரிகள் 7-13:

"வேத பிராமணர்கள் வேதியர்கள் தானோதி
சாதி பிராமணர்கள் சாஸ்திரங்கள் தனோதி
ஓமப்புகையில் உள்த்தரித்த மங்கிலியம்
மங்கிலியம் வாழ்த்தி மணவாளன் கையில்க்கொடுத்து
செங்கையினாலே செய்ய மனஞ்செய்தார்கள்

தெய்வ சபை நடுவே திருத்தமுள்ள மணவறையில்"

5.     ஆசிர்வாத மந்திரம் - கைகோர்வை: மாப்பிள்ளையும்மைத்துனரும் கைகோர்த்து பந்தம் கொள்ளல். இச்சீரின் பொது மங்கல வாழ்த்து பாடப்பெறும். அதன்பின் அருமைப்பெரியவர் சீர்கள் நிறைவேறும். அதன்பின் வைதீக பிராமணர்கள் வேத ஆசீர்வாத மந்திரங்கள் சொல்லி வாழ்த்தியுள்ளனர். மேலும் வந்த குருக்களுக்கு வெற்றிலைபாக்கொடுஊர்ப்பணம் 1/4 ரூபாய் கொடுத்தல்:

ஆதாரங்கள்:
1.    மங்கல வாழ்த்து: வரி 56:
மறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப்

2. அண்ணமார் சாமி கதை: பக்கம்: 347 வரிகள் 23 - 25:
பக்கம்: 348வரி 9:


வடமுகம் வெள்ளோடு கொடகிட்டாம்பாளையம் அருமைக்காரர் சுப்பையா புத்தகத்தில் இருந்து. அவர் கையெழுத்துடன்.


 1. குலகுரு ஆலோசனை
2. பஞ்சாங்கர் சோதிடம் பார்த்தல்
5. பஞ்சாங்கர் நாள்  பார்த்தல்

 58. ஓமம் வளர்த்தல் 


 ஓமத்தில் உச்சாடனம் செய்யும் மந்திரங்கள் 


குருக்கள் ஓமம் வளர்த்தல் 
9. ஓமம் வளர்த்தல் 

மேல்கரை பூந்துறை நாடு வெள்ளோடு நாட்டார் - கொடகிட்டம்பாளையம் சுப்பைய கவுண்டர் (96), 2000 திருமணங்களில் அருமை செய்தவர் . இ.வே.ராவின் சுயமரியாதை இயக்கத்திலும், தி.மு.க விழும் போருப்பாளராக இருந்தவர். 20 பேருக்கு மேல் அருமை வைத்துள்ளார். இவர் நாட்டார் பரியம் 108 ரூபாய் என்றும் காணியாளர் பரியம் 471/2 ரூபாய் என்றும் கூறினார். மேற்கூறியவற்றை ஆமோதித்தார். 

மேல்கரை பூந்துறை நாடு மொடக்குறிச்சி காணியாளர் - மஞ்சக்காட்டுவலசு அருமைக்காரர் மூ.போன்னுசாமிக்கவுண்டர் (79), 1200 திருமணங்களில் அருமை செய்தவர் (கொங்கு நண்பர்கள் சங்கம் பாராட்டு பெற்றவர்). மேலும் பனிரண்டு பேருக்கு அருமை வைத்துள்ளார். 

மேல்கரை பூந்துறை நாடு நஞ்சை ஊத்துக்குளி குடியானவர் - முத்துகவுண்டம்பாளையம் அருமைக்காரர் ராமசாமிக்கவுண்டர் (78), 2000 திருமணங்களில் அருமை செய்தவர் . மேற்கூறியவற்றை ஆமோதித்தார்.

இவர்கள் கூறுகையில்:
"1. புண்ணியார்ச்சனை செய்து கணபதி ஓமம் வளர்க்க காணியாட்சி ஈஸ்வரன் கோயில் குருக்கள் வருவார். அவருக்கு ஊர் பணத்தில் 1/4 பணமும், 10 படி அரிசியும்,
2. சோதிடரான பஞ்சாங்க ஐயர், காணியாட்சி பெருமாள் கோயில் அர்ச்சகராக உள்ளவர், கோயில் மாலையை கொண்டு வந்து முதல்நாள் இரவு தருவார். பணமும், 12 படி அரிசியும
3. திருமணங்களில் சாஸ்திரிகள் - வைதிகர் (அக்கிரகார ஐயர்) வாழ்த்த வருவார். அவருக்கும் படி உண்டு.
4. குலகுரு சாமியார் ஊருக்கு வரும்பொழுது, மங்கிலிய வரி ஐந்து வருடத்துக்கு 11/4 பணம் மங்கிலிய வரி. நான் கொடுத்துள்ளேன். தற்பொழுது 2015 ஆண்டு எங்கள் குலகுருவுக்கு (அய்யம்பாளையம் மடம்) பட்டாபிஷேகம் சிஷ்யர்களான நாங்கள் செய்து வைத்தோம்.

எனவே பூர்விக  பிராமணர்களுக்கும் சீர் முறைகளுக்கும் சம்பந்தம் உண்டு. காணி விட்டு  இடம் பெயர்ந்து குடியானவர்களுக்கு முதல் மூவர் வரமாட்டார்கள் என்பதால், குருவிடம் மங்கிலிய வரியாக வைப்பார். 


                    வேதச் சிறப்பு

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.
கொங்கதேசத்து வேதமாகிய  கிருஷண யஜுர் வேதம் (தைத்திரிய சாகை)Krishna Yajur Veda அதன் தத்துவார்த்தமான அத்வைத வேதாந்தம்


                ஆகமச் சிறப்பு
1அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே.

பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்

உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்
மற்று அவ் வியாமளம் ஆகும்கால் ஓத்தரந்து
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே.                 6

கொங்கதேசத்தில் பெருவாரியாக ஈசன் கோயில்களில் பின்பற்றப்படும்  காமிக ஆகமம்Click

நமது வாழ்க்கை முறைகளை விவரிக்கும் போதாயன க்ருஹ்ய சூத்திரம் (கிரந்த எழுத்து) : Click


இவ்வுலகம் மாயை என்பதற்கு தொல்காப்பியம் காட்டும் வழி:
மரபியல்
6351நிலம்தீ நீர்வளி விசும்பொ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழா அல் வேண்டும்.


மேலும் திருவாசக சிவபுராணம் "மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி  போற்றி", "மாய இருளை", "பொய்யாயின எல்லாம் பொய்கல வந்தருளி" என்று உரைக்கிறது. ஞானசம்பந்தரும் :

"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா."
  
என இவ்வுலகம் மாயை எங்கிறார். மேலும் அத்துவிதத்தைக் கூறுகிறார்.
திமங்கை ஆழ்வாரும்:

"பொய் வண்ணன் மனத்தகற்றி புலனைந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மை வண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ண மரதகத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே"

என்கிறார்.

இவ்வகச்சமயக் கருத்துக்களை வடக்கில் பௌத்தர்கள் அழியுமாறு பரப்பியவர் 'திரவிட சிசு' (தமிழ் குழந்தை) ஆதி சங்கரரே.  சிதம்பரத்துத் தில்லை வாழ் அந்தணர் பலர் சாலிவாகன களப்பிரர் கோன் கூற்றுவ நாயனார் காலத்தே நமது சேர தேசமடைந்தனர். அவர்களை கேரள, மலையாள தேசத்தில் குடியமர்த்தி "நம்பூதிரி" பட்டமும் கொடுத்தான். அம்மரபில் காலடியில் களப்பிரர் காலத்தையடுத்து பிறந்தவர் சங்கரர். 
வேதம் புகரும் அத்துவிதத்தையும், சைவ, வைணவ பேதமற்ற நம் சங்ககால அகச்சமயத்தை பாரதம் முழுதும் புணர்நிர்மாணம் செய்தவரும் பகவத் பாதாரே. இதனாலேயே சமணரும், பௌத்தரும் தென்னாட்டில் கலகம் செய்ய வராமல் போனது. மீண்டும் மிலேச்சர் மார்க்கம் (இஸ்லாம்) நம்மைத் தாக்க வந்த பொது நம்மைக் காத்த விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவரிவர் இம்மரபில் தோன்றிய வித்தியாரண்யர்.


நமது குலகுருக்களுக்கு ஆச்சார்யரும் சிருங்கேரியே .
1960கள் சஞ்சாரத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் வரும்போது ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் கொங்க குலகுருக்கள் கருமாபுரம் மடாதிபதி அளித்த வரவேற்பு

பூங்கோதையார், சின்னம்மையாராகிய பெண் புலவர்கள் அத்வைத வேதாந்தத்தைப்பற்றி புனைந்தவுரை, கொங்கர்தம் நுண்ணிய அத்துவித வேதாந்த கருத்தியலை பறைகிறது


ஸ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாச்சார்யவர்ய,

பதவாக்யப்ரமாணபாராவாரபாரீண,  யமநியமாஸனப்ராணாயாமப்ரத்யாஹாரதாரணாத்யானஸமாத்யஷ்ட்டாங்க,  யோகானுஷ்ட்டானநிஷ்ட்ட,

தபஸ்சக்கரவர்த்தீ,

அனாத்யவிச்சின்னஸ்ரீசங்கராசார்யகுருபரம்பராப்ராப்த,

ஷட்தர்ஸனஸ்தாபனாசார்ய,

வ்யாக்யானஸிம்ஹானாதீஸ்வர,

ஸகலநிகமாகமஸாரஹ்ருதய,

ஸாங்க்யத்ரயப்ரதிபாதக,

வைதிகமார்கப்ரவர்த்தக,

ஸர்வந்த்ரஸ்வந்த்ர,

ஆதிராஜதானீ,

வித்யாநகரமஹாராஜதானீ,

கர்னாடகஸிம்ஹாஸனப்ரதிஷ்ட்டாபனாசார்ய,

ஸ்ரீமத்ராஜாதிராஜகுரு,
பூமண்டலாசார்ய,
ருஷ்யஸ்ருங்கபுராவராதீஸ்வர,
துங்கபத்ராதீரவாஸீ,
ஸ்ரீமத்வித்யாசங்கரபாதபத்மாராதக,
ஸ்ரீமஜ்ஜகத்குரு,
ஸ்ரீமபிநவவித்யாதீர்த்தமஹாஸ்வாமிகுருகமலஸஞ்ஜாத,ஸ்ரீமஜ்ஜகத்குரு,ஸ்ரீபாரதீதீர்த்தமஹாஸ்வாமினாம்,
சரணாரவிந்தயோ :   சாஷ்டாங்கப்ரணாமான்  சமர்பயாமி
www.sringeri.net

குறிப்பு: அந்தணரைத் தவிர அனைவரும் சூத்திரர் என்ற விஷ பிரச்சாரத்தை அசுர யீரானிய சகர பௌத்த நாத்திக Illuminati ஆங்கிலேயர் போலியான ஒரு சங்கர மடத்தை எற்படுத்தி அந்தணர் - அந்தணரல்லாதோர் பிரிவினையை துவக்கி, குரு - சீடர் உறவினை பிரித்தனர். இதனால் உருவானதே கம்யூனிஸ, முற்போக்கு, ட்ரெவிடியன்,'டேமில்', 'சைவ சித்தாந்த', ஆரியனிஸ இயக்கங்கள். இதுதான் இன்றைய குழப்பங்களுக்குக் காரணம்.
போலி மடம் பற்றி:

கொங்க மக்களது பூர்வீக தர்மம் எது? 


நமது இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு இன/சாதிக்கும் ஒவ்வொரு தர்மம் உள்ளது. ஒவ்வொரு இனக்குழுவும் அதற்கென ஒரு மத அடையாளத்தை  ஏற்படுத்தத் தவறவில்லை. அவ்வாறு கொங்கு நாடு மற்றும் தென்னகத்தில் என்னென்ன அடையாளங்கள் உள்ளன என்பது பற்றிய ஆராய்ச்சி இது.

ஸ்மார்த்தர்:

சைவம் ,வைணவம் முதலான அறுவகை சமயங்களை சங்கரர் பிரிக்கும் முன்பே ஒன்றுபட்ட முறையை, அதாவது இஷ்ட தெய்வ  வழிபாடு இருப்பினும், சங்கஇலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளவாறு பிற குழுக்களை வெறுக்காது பொதுப்படையான வழிபாடான முறையை பின்பற்றுபவர்கள். இளங்கோவடிகள் போன்றோரும், சங்க நூலாளரும் அனைத்து கடவுள்களையும் போற்றுவது போலவே இன்றும் வழிபாடு நடத்துபவர்கள். கொங்கு நாட்டின் குல குருக்கள் வைதீக  பிபராமணர்கள், சிவ துவிஜர்கள் (சிவ பிராமணர்கள்/ ஆதிசைவர்), தேசிகர்கள், பிராமணரல்லாத குருக்கள்  என வேறுபட்டாலும் அனைவரும் சங்கரர் வழியிலேயே அனைத்து வைதீக கடவுள்களையும் சமமாகவே பாவித்தாலும், கிட்டத்தட்ட அனைவருமே  சைவ முறைப்படி திரிபுண்டரம் (விபூதி / திருநீறு/ பட்டை) போடுவதையே செய்கின்றனர். நாமம் போட்டவர்கள் கொங்கு நாட்டு பூர்வ குடி அல்லாதோர் என்பது திண்ணம் (சில வைணவ கோயில் பட்டாச்சாரியார்களைத்தவிர). அதற்காக கொங்கு மக்கள் நாமம் போடமாட்டார்களா என்றால் நாமக்கட்டியை குழைத்து பட்டை போல இடுகிறார்களே தவிர உர்துவ புண்டரமாக (நாமமாக) அணிவதில்லை. பின்னால் வந்த களப்பிரர்கள், வடுக வேடுவர், தெலுங்க - கன்னடியர், மார்வாடிகள் ஆகியோர் வேண்டுமெனில் பிறகுறியீடுகளை அணிகின்றனர். ஆச்சரியம் என்னவெனில், இங்கு இருக்கும் சமணர் கோயில்  (பூந்துறை, வெள்ளோடு, திங்களூர், ஆலத்தூர், சீனாபுரம் (ஜீனாபுரம்), விஜயமங்கலம் ) பூசாரிகள் (ஜைன பிராமணர்கள்) கூட விபூதியே தருகின்றனர்/ அணிகின்றனர். மோளிப்பள்ளி அண்ணமார் கோயில், கொல்லிமலை மாசி மலை பெரியண்ண சாமி  கோயில் போன்ற கோயில்களில் பெருமாளே விபூதிதான் அணிந்துள்ளார். சங்கரர் கொங்கு நாடு வழியாக செல்கையில் சாணார் (மரம் ஏறுபவர் )  ஒருவரிடம் மரத்தை வளைக்கும் மந்திரம் பயின்றதாக பல பட்டயங்கள் சொல்கின்றன. கொங்கு நாட்டினில் அனைத்து பூர்வ குடிகளும் போதாயன சூத்திரத்தையே தமது வாழ்வியல் முறையாக தொன்றுதொட்டு கடைபிடிப்பது பல இலக்கிய/ வாழ்க்கைமுறை விசயங்களால் உறுதியாகிறது. மேலும் இங்குள்ள அனைத்து காணி சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலுக்கு பேதங்களில்லாமல் பூர்வ குடிகள் செல்கின்றனர். பெரும்பாலான இடங்களில் விநாயகர், முருகர்,  சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன் ஒன்றாக இருப்பதனைக் காணலாம். நவக்கிரக வழிபாடு, தொண்டர் வழிபாடு (நாயன்மார், ஆழ்வார்) சிலை வடிவங்களில் ஒரு நூறு வருடங்களுக்குள்தான் ஏற்பட்டுள்ளது என்பது சிலைகலைக் கண்டாலே தெரியும். இது தமிழ்நாட்டில் இருந்து தற்பொழுது ஆன் டிமாண்டால் வந்தது என்பதும் பலரும் அறிவர். கிட்டத்தட்ட  எல்லா காணி கோயில்களில் சிவனும் பெருமாள் கோயில்களும் ஒரே சுவற்றுள் உள்ளதையும் , அதற்கு ஸ்தானிகரான சிவாச்சாரியாரே புகை செய்வதையும் காணலாம். சிறிது பேமஸான பெரிய கோயில்களில் மட்டும் பட்டாச்சாரியார்கள் பெருமாளுக்கென உள்ளனர். இதனைப்பற்றி கேட்கையில் பல பெரியோர்கள் கூறியது:
"கொங்கு நாடே பழைய சேர நாடு. இந்நாட்டின் தலைமை பீடம் பாசூரிலுள்ள தீக்ஷதர் மடம் என்றனர். நானும் பாசூர் சென்று பார்த்தேன். அங்கு திருவானைக்காவலில் வாரிசுகள் உள்ளனர் என்று அறிந்து அங்கு சென்றேன். அங்கிருந்த தீக்ஷதர்  கூறையில், ஆதியில் சேர நாட்டுக்கு ராஜகுருவாக ஸத்தியோஜாதமான பாசூர் மடமும், சோழ நாட்டுக்கு கும்பகோணத்திலும், பாண்டி நாட்டிற்கு ஈசானமான கிளா (கலா) மடமும், தொண்டை நாட்டிற்கு ஆகோர மடமான நெருஞ்சிபேட்டை மடமும் என்று அழகாக ஆதாரங்களுடன் விளக்கினார். இன்றும் தமிழக பூர்வ குடியினர் இம்மடங்களைதான் குலகுருக்களென கொண்டுள்ளதாக கூறினார். அவர் தந்தது இதோ:

சேர கொங்கு  நாடு: பாசூர் (சத்யோஜாத சிவ முகம்) மடம் - சேர மன்னர், கொங்கு வேளாளர், கொங்கு செட்டியார், கொங்கு கருணீகர் முதலானோர்.

பாண்டி நாடு: ஈசான சிவ முக கிளா (கலா) மடம் - பாண்டிய மன்னர், பாண்டி செட்டிகள் (நாட்டரசன்கோட்டை செட்டியார்கள்), முதலானோர்.

தொண்டை மண்டலம் : அகோர சிவமுக நெருஞ்சிபெட்டை மடம்: தொண்டை மண்டல வேளாளர், தொண்டை மண்டல செட்டிகள் (நெய்க்காரர், வாணியர் முதலானோர்).

இம்மடங்களுக்குக் கீழ் பல சிவ பிராமண, சைவ பண்டார மடங்களும் உள்ளனர்.

இவர்களே பொதுவாக தத்தம் பகுதிகளில் சங்கரருக்கு முன்பிருந்து ஆட்சி செலுத்தினர் எனவும், சைவ - வைணவ பூசல்கள் பெரும்பாலும் சோழ நாட்டில் காபாலிகர், காளாமுகர், வீர சைவர்களும் (லிங்காயத்துகள்), வீர வைணவர்களும் (பெருமாள் மட்டுமே பிரிவு) ஆகிய பாஷாண்டிகள் (வெறியர்கள்) மட்டுமே என அறிகிறோம்.பார்க்க (புக்கனான் மதறாஸ், கனரா, மைசூர் புத்தகம்):


"வேதியன் பக்கமே விரைவுடன் சென்று"
"மறையோர்கள் வேதம்சொல்ல மற்றவர்கள் ஆசிகூற"
"வேதம் ஓதிடும் வேதியர் வாழி"

கொங்கு மண்டல சதகம் (கார்மேகக் கவிஞர்):

"சோழன் குடியேற்றிய சிவத்விஜர்களுக்கும் 
முன்னம் இங்கிருந்தவர்களுக்கும் சில சாம்பிரதாய பேதங்களிருக்கின்றன. 
அவர்கள் கிராமாந்தரங்களில் பூஜகர் களாயும், நாட்டுக் குருத்வமுடையவர்களாயும் இருக்கிறார்கள். புதியவர்கள்பாடல் பெற்ற தலங்கள், மற்றும் பிரதான ஆலயங்களில் அர்ச்சகர்களாயும்  ஆசாரியத்வமுடையர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்."


கொங்கதேச பூர்வகுடிகளான பதினெட்டு குடிகள் ஸ்மார்த்த தர்மத்தினர் என்பதற்குப் புலவர் ராசுவின் மற்றும் எனது ஆய்வு ஒப்புதல் கடிதம்:
ஸ்ம்ருதிகளை (வேதம்,புராணங்கள்,சூத்திரங்கள்) கடைப்பிடிப்பவர்கள் ஸ்மார்த்தர்கள். 
ஆதிசைவ குருக்களும் ஸ்மார்த்தர்களே:மேலும் சிருங்கேரி சங்கராச்சார்யருக்கும் பழனி குருக்களுக்கும் உள்ள தொடர்பு : 

பாசூர் மடத்தில் சிருங்கேரி முத்திரை:

மேலும் ஆதிசைவ மடங்களில் மூன்றன் பட்டங்கள் 'வேதாந்த பண்டிதர்'  என்பது, இலுமினேட்டி முகலாய அவுரங்கசீப்  அடிமை ஆர்க்காடு நவாபு செய்த வேதாந்தர்/சித்தாந்த பிரித்தாளும்  சூழ்ச்சி,  நமது கொங்கதேசத்தில் மைசூராராட்சி ஆதலால் பரவவில்லை  என்பதனைப் பறைசாற்றுகிறது.ஸ்வயம் ஆச்சார்யர்களாக உள்ள இக்குலகுருக்களே பிற ஆதிசைவர்களுக்கும் ஆச்சார்யர்கள்.ஸ்ரீகண்டாச்சார்ய வேதாந்தம் இங்கு இல்லை.இதன் மூலம்:
 தொண்டைநாட்டு நாயனார் ஆதிசைவர்,
சோழநாட்டு தேசிக ஆதிசைவர்,
பாண்டியநாட்டு பட்டர் ஆதிசைவர் 
ஜாதியினர் போலல்லாது கொங்கநாட்டு 
கிராமிய ஆதிசைவர்,
அலகு ஆதிசைவர் 
என இருவரும் பூர்விகமான தர்மங்களைக் கடைபிடிக்கின்றனர் எனத்தெளிவு.


 கொங்கதேச சரித்திர கலாச்சார கேந்திரம், ஈரோடு
pondheepankar@gmail.com

4 comments:

 1. புலத்தியர் தொல்காப்பியர் கிடையாது... அவர் இராவணனின் தந்தை. தொல்காப்பியர் திரணதூமக்கினி எனப்படுவார். அவர் ஜமதக்கினியின் மகன்.

  ReplyDelete
 2. தொல்காப்பியர் வரலாறு


  தொல்காப்பிய மென்னும் இப்பேரிலக்கண நூலைச் செய்த
  தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவரியற்பெயர்
  திரணதூமாக்கினியார் என்பதும் இந் நூற்பாயிரத்துள்
  "சமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை
  வாங்கிக்கொண்டு," என்று நச்சினார்க்கினியர் கூறுதலானே
  அறியக்கிடக்கின்றன. இன்னும், அப்பாயிரத்துள் 'தொல்காப்பியன்'
  என்பதற்குப் 'பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று
  பெயராயிற்று' என்று கூறுதலானே காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும்,
  சமதக்கினி புதல்வ ரென்பதனானே அந்தண குலத்தவ ரென்பதும்
  அறியத்தக்கன. சமதக்கினி புதல்வரென்றதனானே பரசுராமர் இவர்
  சகோதரராவா ரென்பதும் பெறப்படும். இராமயணத்துள்ளே பரசுராமர்
  இராமரோடு போரை விரும்பிச் சென்று அவருக்குத் தோற்றதாகவும்,
  அவருக்கு மிக முந்தினவராகவும் அறியப்படுதலினாலும், இராமராற்
  சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட குரங்குப்படை இடைச்சங்க மிருந்த
  கபாடபுரத்தை யடைந்து சென்றதாக அறியப்படுதலினாலும், இடைச்சங்கப்
  புலவர்களா யிருந்தோர் அகத்தியருந் தொல்காப்பியரும் முதலாயினோர்
  என்று இறையனா ரகப்பொருளுரை முதலியவற்றா னறியப்படுதலினாலும்,
  தொல்காப்பியரும் இராமர் காலத்துக்கு மிக முந்தியவ ரென்பதும்,
  தொல்காப்பியரிருந்து பல்லாயிரம் யாண்டுகள் சென்றனவென்பதும்
  அறியத்தக்கன. ஆயினும் இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரருட் சிலர்,
  மூவாயிரம் ஆண்டு என்றும் ஆறாயிரம் ஆண்டு என்றும் இப்படிப்
  பலவாறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர்,
  ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் அப் பொருளதிகாரப்
  பதிப்புரையில் பன்னீராயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதென்று
  கூறியிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய
  சுப்பிரமணியபிள்ளை யவர்கள் கி.மு. 700 ஆண்டுகளுக்குப் பிற்படா
  தென்கின்றனர். எவ்வாறு கூறினும் இவர் காலம் 12,000 ஆண்டுகளுக்கு
  மிக முற்படுமன்றிப் பிற்படாது.

  ReplyDelete
  Replies
  1. இனி, இடைச் சங்கத்தார்க்கு இந் நூல் இலக்கணமாக இருந்ததாக
   அறியப்படுதலானே முதற்சங்கத் திறுதியில் இத் தொல்காப்பியம்
   இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந் துணரத் தக்கது.


   இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது 'ஐந்திர நிறைந்த
   தொல்காப்பியன்' என்பதனா னறியத் தக்கது. இவர் அகத்தியரோடு
   தென்னாடு புக்கபின் அவர்பாற் செந்தமிழ் இலக்கிய விலக்கணங்களைக்
   கற்று அவருடைய முதன் மாணாக்கராய் விளங்கினர். அகத்தியர்பால்
   இவருடன் கற்றவர்கள் அதங்கோட்டாசிரியர் பனம்பாரனார் செம்பூட்சேய்
   வையாபிகர் அவிநயனார் காக்கைபாடினியார் துராலிங்கர் வாய்ப்பியர்
   கழாரம்பர் நற்றத்தர் வாமனர் என்னும் பதினொருவருமாவர்.
   தொல்காப்பியர் முதலாகப் பன்னிருவர் அகத்தியர் பால் ஒருங்கு கற்றனர்
   என்பது,


   "மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
   தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
   தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
   துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
   பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த"


   என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளாலும்,


   "வீங்குகட லுடுத்த வியன்கண்ஞா லத்துத்
   தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென
   வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக
   ழானாப் பெருமை அகத்திய னென்னு
   மருந்தவ முனிவ னாக்கிய முதனூல்
   பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர்
   நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்"


   என்னும் பன்னிரு படலச் செய்யுளானு மறியப்படும்.


   இவரா லியற்றப்பட்ட இத் தொல்காப்பிய மென்னும் நூலுக்கு
   உரைசெய்தோராகத் தெரியப்பட்டவர் இளம்பூரணர், கல்லாடர்,
   பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் என்னும்
   அறுவராவர். சேனாவரையரும் தெய்வச்சிலையாரும் சொல்லதிகாரத்திற்கு
   மாத்திரமே உரை செய்தனர்.

   முன் பக்கம்

   Delete